

சென்னை: சென்னையில் புகையிலை பொருட்களை அறவே ஒழிக்கும் பொருட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நாள் தீவிர சோதனையில், குட்கா, மாவா போன்ற புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தொடர்பாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 79 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், ஜூன் 10 முதல் ஒரு வார காலத்தில் கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்களை கடத்தி வந்தது, பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக சென்னையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.