

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் மண் கடத் தலின் போது கோட்டாட்சியரிடம் சிக்கிய கவுன்சிலர், லாரியை விட்டு விட்டு தப்பியோடி உள்ளார்.கோட்டாட்சியர் புகாரளித்தும் லாரியை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் தொடர்பு டையவர்கள் பெயர்களை பதிவுசெய்ய தயக்கம் காட்டி வரு கின்றனர்.
உளுந்தூர்பேட்டை நகர் பகுதியில் உள்ள ஏரியில் இருந்துமண் கடத்தப்படுவதாக திருக் கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவர் நேற்றுமுன்தினம் இரவு உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி அருகேலாரிகளை நிறுத்தி சோதனை யிட்டுள்ளார்.
அப்போது ஒரு லாரியில் இருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து அவர் காவல் துறைக்கு தகவல் அளித்து லாரியை காவல் நிலையம் எடுத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் போலீஸார் விசாரணையில், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பண்ருட்டியை அடுத்த திருவக் கரையைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது.
அவரிடமிருந்து உளுந் தூர்பேட்டையைச் சேர்ந்த ஒருகவுன்சிலரின் கணவர் வாட கைக்கு எடுத்து, மண் கடத்த லுக்கு பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸார், மண் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும், அதன் பின்னரே யார் யார் மீது வழக்குப் பதிவு என்பது முடிவாகும் என்றனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரின் துணையோடு கவுன்சிலர்கள் மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், காவல்துறையினருக்கும் உரிய சன்மானம் வழங்கப்படுவதால் அவர்களும் கடத்தல்காரர்க ளுக்கு உறுதுணையாக செயல் படுகின்றனர் என்கின்றனர் உளுந் தூர்பேட்டை வாசிகள்.