

புதுச்சேரி: புதுச்சேரி பிருந்தாவனம் காமராஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் அனுமதியின்றி ‘ஸ்பா' இயங்குவதாக கோரிமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீ ஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தது.
அங்கு ஆன்லைன் மூலமாக பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேலாளரான முதலியார்பேட்டை வெள்ளாளர் வீதியைச் சேர்ந்த பரத் (27), என்பவரை கைது செய்தனர். மேலும் அறையில் இருந்த ஆணுறை பாக்கெட்டுகள், 3 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணை யில் இந்த ‘ஸ்பா' அனுமதியின்றி இயங்குவதும், பாலியல் தொழில் நடப்பதற்கான தடயங்கள் சிக்கியநிலையில் இதன் உரிமையாளரான லாஸ்பேட்டை கைலாஷ் நகர் மணிஎன்பவரது மனைவி லதா (31)என்பவரையும், இந்த வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளர் பாகூர் முள்ளோடை மதிகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சேகர் (48) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.