

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் , எஸ்.புதூர் அருகே கருமிபட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவர் விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு கேட்டு மின்வாரியத்தில் விண்ணப்பித் திருந்தார்.
இதற்கான அனுமதி கிடைத்த நிலையில், ஒப்புதல் அட்டை வழங்க புழுதிப்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் செல்வராஜ் ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கருப்பையா புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியவாறு, ரசாயன மை தடவிய பணத்தை புழுதிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இருந்த ஊழியர் செல்வராஜிடம் கருப்பையா கொடுத்தார். அப்போது மறைந் திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.