வேலூர் | அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு

வேலூர் | அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு
Updated on
1 min read

வேலூர்: வேலூர் மாவட்டம் அன்பூண்டி அருகே அணுகுசாலையை யொட்டியுள்ள முட்புதகரில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அவ் வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்த போது, அங்கு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த இளம்பெண் கொணவட்டம் கீழாண்டை தெருவைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரின் மகள் சுமித்தரா (28) என்பதும், வீட்டு வேலை செய்து வந்தது தெரியவந்தது. கடந்த 12-ம் தேதி வேலைக்கு சென்ற சுமித்தரா அதன் பிறகு வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.

சுமித்தரா குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்த நிலையில் தற்போது சாலையோரம் அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in