

கோவை: கோவை ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (32). கூலித்தொழிலாளி. இவருக்கும் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமியை அழைத்துச்சென்று கணேசன் திருமணம் செய்துள்ளார். பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த னர். ஜூன் 8-ம் தேதி சிறுமியையும், கணேசனையும் போலீஸார் கண்டறிந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கணேசன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் (போக்ஸோ) மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கணேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜி.குலசேகரன் தீர்ப் பளித்தார்.