

ஸ்ரீவில்லிபுத்தூர்: போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தமங்களத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (30). இவர் 16 வயது சிறுமி ஒருவரை சென்னைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ் வரனைக் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பாண்டீஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூரணஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.