

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் பகுதி சிவகங்கை சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரில் அட்டைப் பெட்டிகளில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 1,200 போலி மதுபாட்டில்கள் இருந்தன. காரில் இருந்த 4 பேரில் 2 பேர் தப்பியோடினர்.
விசாரணையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு மதுபாட்டில்களைக் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பட்டுக்கோட்டையில் சுகாதாரத் துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. போலி மது பாட்டில்கள், காரை போலீஸார் பறிமுதல் செய்ததோடு, கார் ஓட்டுநரான பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், ஜெயவீரபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். 2 ேபரை தேடி வருகின்றனர்.