Published : 14 Jun 2022 06:04 AM
Last Updated : 14 Jun 2022 06:04 AM
கடலூர்: புவனகிரி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் மனைவி சீத்தா (45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துவேல் உயிரிழந்தார். இதனால் சீத்தா தனியாக வசித்து வந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சித்தா வீட்டிற்கு சென்றார். நேற்று காலை நீண்டநேரம் அவரின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சீத்தா ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து புவனகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜா, புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
சீத்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சீத்தா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT