புதுச்சேரி | இளைஞர் தற்கொலை விவகாரம்: பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை

புதுச்சேரி | இளைஞர் தற்கொலை விவகாரம்: பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி பிச்சைவீரன்பேட் பகுதியைச் சேர்ந்தவர் லோகசந்தர் (27), ஏசி மெக்கானிக். இவர் சில தினங்களுக்கு முன்பு விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் லோகசந்தரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் முன்பு திரண்டு, திடீரென காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து விழுப்புரம்-புதுச்சேரி சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக போாட்டத்தில் ஈடுபட் டவர்கள் கூறுகையில், “லோகசந்தருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கெனவே திருமணமான 40 வயது பெண், தன்னுடன் லோசகந்தர் நெருக்கமாக இருந்ததாக பெண் வீட்டாரிடம் கூறியதால் திரு மணம் நின்றுவிட்டது.

இதனால் மன விரக்தியடைந்த லோகசந்தர் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீஸில் புகார் செய்தும், அந்த பெண் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே லோகசந்தர் இறப்புக்கு காரணமாக பெண் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதையடுத்து போலீஸார் அவர்களிடம் பேசி போராட்டத்தை கைவிட செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் முன்பு திரண்டு, திடீரென காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in