

விழுப்புரம்: வானூர் அருகே, நாட்டு வெடி குண்டுகளுடன் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வானூர் மற்றும் சுற்றுவட் டாரப்பகுதிகளில் விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடு வதாக திண்டிவனம் வனத்துறையி னருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, வனசரக அலுவலர் அஸ்வினி உத்தரவின் பேரில், வனவர்கள் திருமலை, பாலசுந்தரம் மற்றும்வனக்காப்பாளர்கள் நேற்று முன்தினம் மாலை ஊசுட்டேரிப்பகுதி யில் ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அவ்வழியாக பைக்கில் வந்த இருவரிடம் வனத்துறையினர் விசாரித்தனர். அவர்கள் முரணான பதில்களை கூறவே, அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். சோதனையில் 19 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.
அவர்கள் இருவரும், வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டை சேர்ந்த வெங்கடேஷ் (21), வில்லியனூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தமுத்து (20) என்பதும் தெரிய வந்தது.அவர்கள், வானூர் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில், நாட்டுவெடிகுண்டு வைத்து, காட்டுப்பன்றிகளை பிடிக்க வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 19 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில்செஞ்சி கிளை சிறையில் அடைத் தனர்.