Published : 13 Jun 2022 06:28 AM
Last Updated : 13 Jun 2022 06:28 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை தடுப்புச் சட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி சிவானந்த மடம் வீதியைச் சேர்ந்தவர் குழந்தைநாதன் (47). இவர் அப்பகுதியில் ஐஸ் தொழிற்சாலை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஆறுமுகம் நகரைச் சேர்ந்த செந்தில் (48) என்பவரிடம் 2017-ல் வீட்டுப் பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.10.10 லட்சம் கடன் வாங்கினார்.
அந்தப் பணத்தை வட்டியுடன் சேர்த்து குழந்தைநாதன் தந்தை கஸ்பர், செந்திலிடம் கொடுத்துவிட்டு, வீட்டுப் பத்திரங்களை கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்க மறுத்ததோடு, மேலும் ரூ.20 லட்சம் வட்டி கேட்டுள்ளார். இதையடுத்து குழந்தைநாதன் புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீஸார் கந்துவட்டி கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செந்திலைக் கைது செய்தனர். அதேபோல் கந்துவட்டி கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பத்தூர் அருகே தெம்மாபட்டு பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரை திருப்பத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
எஸ்.பி செந்தில்குமார் கூறியதாவது: பொதுமக்களிடம் கந்துவட்டி வசூல் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக எஸ்பி- 94441 14125, காரைக்குடி டிஎஸ்பி- 94981 86264, திருப்பத்தூர் டிஎஸ்பி-94431 83707, சிவகங்கை டிஎஸ்பி-83000 00628, தேவகோட்டை டிஎஸ்பி-94981 90445, மானாமதுரை டிஎஸ்பி 83000 20336 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT