

சென்னை: தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை சென்னையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்பேரில், நேற்று காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம், சென்னை நகரம் முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 43 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.13,995 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.