

மதுரை: மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம் பட்டியைச் சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது மகன் ஈஸ்வரன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது உறவினரின் மகளான நர்சிங் படித்து வந்த ரேவதியை காதலிப்பதாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் ஈஸ்வரன் வற்புறுத்தினார்.
ஈஸ்வரனின் காதலை ஏற்க மறுத்த ரேவதி, வெளிநாட்டு வேலைக்குச் செல்ல மேற்படிப்புப் படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், 2005-ல் வீட்டில் தனியாக இருந்த ரேவதியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். உசிலம்பட்டி நகர் போலீஸார் ஈஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் முடிந்த நிலையில், ஈஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப் பளித்தார்.