

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள ஓயாம்பாறை மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக வருசநாடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம், வருசநாடு சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கஞ்சா பயிரிட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் 40 நாட்கள் ஆன 17 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை போலீஸார் அழித்தனர்.
கஞ்சா பயிரிட்ட காந்தி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி, வாலிப்பாறையைச் சேர்ந்த சந்திரன், தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், தண்டியக்குளத்தைச் சேர்ந்த பெருமாள், செல்வம் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.