Published : 09 Jun 2022 06:06 AM
Last Updated : 09 Jun 2022 06:06 AM
விழுப்புரம்: கந்து வட்டி கொடுமையால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழை வாயிலில் தாய், மகன் தீக்குளிக்க முயன்றனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே, நேற்று ஒரு பெண்ணும், அவரது மகனும் தங்கள் உடல்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த உதவிகாவல் ஆய்வாளர் முருகன் தலை மையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்,விழுப்புரம் அருகே வி.புதுப்பாளை யத்தைச் சேர்ந்த அன்னப்பூரணி(42) என்பதும், சத்துணவு பொறுப்பா ளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், அப்பெண் கூறியது: எனது கணவர் சசிக்குமார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். எனது மகனின் படிப்பு செலவுக்காக ஒருவரிடம் பணம் வாங்கினேன். இதற்கு கந்துவட்டி கேட்டு மிரட்டி வருகிறார்.
கெடார் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகனையும் அந்த நபர் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாப்பு இல்லாத சூழலில் என்னால் வாழ முடியவில்லை. அதனால் மகனுடன் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT