ஓமலூர் அருகே மாணவிக்கு தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

ஓமலூர் அருகே மாணவிக்கு தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது
Updated on
1 min read

சேலம்: ஓமலூர் அருகே மாணவிக்கு தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் ஓமலூர் அருகேயுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தலைமை ஆசிரியராக மேட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் விஜயகுமார் (43) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பயிலும் மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தகவல் அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான மகளிர் போலீஸார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தலைமை ஆசிரியர், மாணவிக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமை ஆசிரியர் விஜயகுமாரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in