Published : 03 Jun 2022 06:38 AM
Last Updated : 03 Jun 2022 06:38 AM
கோவை: சூலூர் அருகே போலீஸார் போல நடித்து மளிகை கடை உரிமையா ளர் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற 4 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலையில் உள்ள வெங்கடாசலம் நகரைச் சேர்ந்தவர் திலகம் (60). இவருக்கு கவியரசன்,சிவா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். வீடு அருகே சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கடையில் சிவா மட்டும் இருந்துள்ளார். அப்போது, காரில் வந்த 4 பேர் தங்களைபோலீஸார் என அறிமுகம் செய்துகொண்டு, ‘கடையில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்துள்ளது. சோதனை நடத்த வேண்டும்’ எனத் தெரிவித் துள்ளனர்.
அவர்களை போலீஸார் என நம்பிய சிவாவும் சோதனை நடத்த அனுமதித்துள்ளார்.
கடையில் புகையிலை பொருட்கள் எதுவும் இல்லாததால், வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர். அங்கும் எதுவும் கிடைக்காத நிலையில், விசாரணை நடத்த வேண்டும்எனக் கூறி சிவாவை காரில் அழைத்துச் சென்று, சிறிது தூரத்திலேயே இறக்கி விட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சிவா வீட்டுக்கு வந்து, பணம், நகைகளைப் சரிபார்த்துள்ளார்.
அப்போதுதான், 5 பவுன் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் தொகையை அவர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, சிவா சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT