

புதுச்சேரி: லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அங்காளப்பன். இவர் செட்டித் தெருவில் ஜிம் நடத்தி வருகிறார். இங்கு உடற்பயிற்சி செய்ய தினமும் வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் நிலையில், அவரது ஜிம்மில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 12 ஜோடி பிராண்டட் ஷூக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.பெரியக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அதில் வளவனூரைச் சேர்ந்த முகுந்தன் (22), அபிஷேக் (23) ஆகியோர் மதுபோதையில் ஜிம்முக்குள் புகுந்து ஷூக்களை திருடியது தெரியவந்தது.அவர்கள் கைது செய்யப்பட்டனர்.