Published : 02 Jun 2022 06:12 AM
Last Updated : 02 Jun 2022 06:12 AM

ராமநாதபுரம் | வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.2.29 லட்சம் மோசடி

ராமநாதபுரம்: திருஉத்தரகோசமங்கை இளைஞரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.2,29,650 மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை வடக்குத்தெருவைச் சேர்ந்த போஸ் மகன் கணேசமூர்த்தி (25). அதே தெருவில் வசிப்பவர் விக்னேஷ். இவர், தனது நண்பர் திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் அர்ஜுன்பாண்டியை (30) கணேசமூர்த்தியிடம் அறிமுகப்படுத்தினார்.

அர்ஜுன்பாண்டி, தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் பணிபுரிந்து வருவதாகவும், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகவும் கணேசமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கணேசமூர்த்தி, அர்ஜுன்பாண்டியின் வங்கிக் கணக்கில் பல தவணைகளில் ரூ.2,36,650 செலுத்தியுள்ளார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. கணேசமூர்த்தி பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.7,000 மட்டும் அர்ஜுன் பாண்டி தந்துள்ளார். மீதிப் பணத்தை தரவில்லை.

இதையடுத்து கணேசமூர்த்தி புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், அர்ஜுன்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x