Published : 02 Jun 2022 06:00 AM
Last Updated : 02 Jun 2022 06:00 AM
வேலூர்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு வங்கியின் பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி (38) என்பவர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ் ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வங்கி மேலாளர் உமா மகேஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட உமா மகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உமாமகேஸ்வரியை வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரகம் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT