

திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் நாச்சம்மாள் (85). இவரை கடந்த 2020-ம் ஆண்டு ஜன. 22-ம் தேதி அரிவாளால் வெட்டிவிட்டு, நகை, பணத்தை வழிப்பறி செய்தது தொடர்பாக வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட செல்லம் நகர் பகவான் காம்பவுண்டை சேர்ந்த சங்கிலியின் மனைவி புஷ்பம் (50) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில்திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி புகழேந்திநேற்று தீர்ப்பளித்தார். அதில்,புஷ்பத்துக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.