மனைவியை கொன்ற கணவர் மாமியார் உட்பட 3 பேருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை கொன்ற கணவர் மாமியார் உட்பட 3 பேருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமேசுவரம் காந்திநகரைச் சேர்ந்த சுப்பையா மகன் சாந்தகுமார்(39). தச்சுத் தொழிலாளியான இவருக்கும், அறந்தாங்கியை சேர்ந்த சாந்தி(30) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சாந்திக்கும், கணவர், மாமியாருக்கும் இடையே தகராறு நடந்தது. கடந்த 29.4.14 அன்றும் குடும்பச் சண்டை நடந்துள்ளது. அப்போது சாந்தகுமார் மனைவி சாந்தியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதற்கு சாந்தகுமாரின் தாய் மலையரசி(56), சகோதரி வனிதா(37) ஆகியோர் உடந்தை யாக இருந்துள்ளனர்.

இதில் சாந்தகுமார், மலை யரசி, வனிதா ஆகியோரை ராமேசுவரம் நகர் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கணவர் சாந்தகுமார், மலையரசி, வனிதா ஆகியோ ருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஏ.சுபத்ரா ஆயுள் தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in