திருநெல்வேலி | வரைபடம் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய முன்னாள் சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி | வரைபடம் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய முன்னாள் சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

திருநெல்வேலி: வீட்டுமனையை அளவீடு செய்து வரைபடம் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் சர்வேயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கேடிசி நகரை சேர்ந்த செல்லம் என்பவர் தனது வீட்டுமனையை அளவீடு செய்து வரைபடம் வழங்க கோரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக அப்போதைய சர்வேயர் சின்னையாகுமார் என்பவர் லஞ்சம் கேட்டுள்ளார். கடந்த 24.8.2005-ம் தேதி சர்வேயர் சின்னையாகுமார் ரூ. 500 லஞ்சம் வாங்கியபோது, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து முன்னாள் சர்வேயர் சின்னையாகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி செந்தில்முரளி தீர்ப்பு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in