

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் அடகு கடையின் சுவற்றை துளையிட்டு தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை காவல்துறை யினர் கைது செய் தனர். இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள 3 பேரை காவல் துறையினர் தேடி வரு கின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சேர்க்காடு பகுதியில் அனில்குமார் என்பவரின் அடகு கடையில் கடந்த 25-ம் தேதி சுவற்றை துளையிட்ட மர்ம நபர்கள் 50 பவுன் தங்க நகைகள், சுமார் நான்கரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக திருவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் நடத்திய முதற் கட்ட விசாரணையில், கள்ளக் குறிச்சி மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (33) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அனில் குமாரின் கடையில் திருடிய 25 கிராம் தங்க நகைகள், 1.800 கிலோ வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த பொக்கை முருகன், ராஜா மற்றும் மணிகண்டன் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘சுவற்றில் துளையிட்ட இடத்தில் டவல் துணியில் கட்டப்பட்ட கல் ஒன்று விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜூஸ் கடையில் துளையிட்டு உள்ளே புகுந்தவர்கள் அதன் பக்கவாட்டு சுவர் வழியாக நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை திருடி யுள்ளனர். திருட்டை முடித்து திரும்பும்போது, அவர்கள் ஜூஸ் கடையில் இருந்த ஜூஸ்களை குடித்ததுடன் அங்கிருந்து பழங்களையும் தின்றுவிட்டு சென்றது தெரிய வந்தது.
இதன்மூலம் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர் இந்த திருட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தோம். இதையடுத்து, அந்த கும்பல்களின் விவரங் களை திரட்டி விசாரித்ததில் முருகனின் பெயர் தெரிய வந்தது. அவர் மீது திரு வண்ணாமலையில் 3, உளுந்தூர்பேட்டையில் ஒரு நகைக்கடையின் சுவற்றை துளையிட்டு நகைகளை திருடிய வழக்குகள் நிலுவை யில் இருப்பது தெரியவந்தது.
அவரது இருப்பிடத்தை கண்டறிந்து முருகனையும், அவருடன் இருந்த 17 வயது சிறு வனையும் கைது செய்தோம். அவர்களும் அனில்குமார் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டனர். இதில், 17 வயது சிறுவனும், அவரது சகோதரர் மணிகண்டனும் சேர்க்காடு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகளை இறைச்சிக்காக வாங்கிச் செல்வது வழக்கம்.
ஒருமுறை சேர்க்காடு வழியாக செல்லும்போது அனில் குமாரின் கடையை பார்த்த 17 வயது சிறுவன் முருகனுக்கு தகவல் தெரி வித்துள்ளார். அதன் பேரில், அந்த கடையை முருகன் தலைமையிலான கும்பல் நோட்டமிட்டு திட்டமிட்ட படி நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
நகைகளை பங்கு பிரித்த பிறகு தலை மறைவான மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளன. சிக்கிய இருவரிடம் இருந்த நகை களில் அனில்குமாரின் கடையின் முத்திரையுடன் எடை விவரங்கள் அடங்கிய அட்டை இருந்தது இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக மாறியது’’ என்றனர்.