Published : 25 May 2022 06:43 AM
Last Updated : 25 May 2022 06:43 AM

பாலியல் வன்கொடுமை வழக்கு; போலீஸாரிடம் விசாரணை கைதி ரகளை: கமுதி போலீஸார் வழக்கு பதிவு

பத்ம ஈஸ்வரன்

கமுதி: கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி கமுதி நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது போலீஸாரிடம் கைபேசி கேட்டு காவல் வாகன கண்ணாடியை உடைத்து ரகளை செய்ததால் கமுதி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் கடந்த மார்ச் 23-ம் தேதி சுற்றுலாவுக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கமுதி அருகே கே.வேப்பங்குளத்தை சேர்ந்த பத்ம ஈஸ்வரன்(24), நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார்(20), பசும்பொன்னை சேர்ந்த அஜித்குமார்(21) உட் பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக பத்மஈஸ்வரனை நேற்று விசா ரணைக்காக கடலாடி, கமுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸார் காவல் வாக னத்தில் மதுரையிலிருந்து அழைத்து வந்தனர். கடலாடி நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, கமுதிக்கு அழைத்து வரும் வழியில் கோட்டைமேடு கல்லூரி அருகே வரும்போது போலீஸாரிடம் கைபேசி கேட்டு பத்ம ஈஸ்வரன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். போலீஸார் தர மறுத்ததால் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, காவல் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார்.

இதுகுறித்து ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் முத்திருள் பாண்டி அளித்த புகாரின் பேரில், கமுதி போலீஸார் பத்ம ஈஸ்வரன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கமுதி நீதிமன்ற விசாரணைக்குப் பின், மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x