

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீ ஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தக்கலை எஸ்.ஐ. ராஜசேகரன்தலைமையில் தனிப்படை போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு திருவிதா ங்கோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் காரில்இருந்த இருவரையும் கைது செய்து, தக்கலை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
விசாரணையில் அவர்கள் திருவிதாங்கோடு புதுப்பள்ளி தெருவை சேர்ந்த செல்வின்(45),கமலாபந்தி தெருவை சேர்ந்த மனோஜ் (31)என்பது தெரியவந்தது. செல்வின் பளு தூக்கும்வீரர் ஆவார். மும்பையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி யாளராக வேலை பார்த்து வருகிறார்.மும்பையில் உள்ள பெண் எஸ்.ஐ. ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ள அவர், போதை கும்பலுடன் தொடர்பு வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதற்கு உதவியாக அவரது நண்பர் மனோஜ் இருந்துள்ளார்.இருவரும் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது குமரி, கேரளாவுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்துள்ளது தெரியவந்தது.