

சென்னை: தமிழக காவல் துறை தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு கடந்த 17-ம்தேதி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தமிழகமுதல்வர் வீடு மற்றும் விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதையடுத்து, முதல்வர் வீடு மற்றும் விமாநிலையத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார், மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். எனினும், இதில் வெடி பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் சுந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன்(25), வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.இதையடுத்து, சுத்தமல்லி சென்ற போலீஸார் தாமைக்கண்ணனை நேற்று கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.