கடலூரில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்

கடலூரில் செம்மண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி எதிரே மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் செம்மண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி எதிரே மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கடலூர்: கடலூரில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகள் தனலட்சுமி (19). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் முத லாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரியின் கழிவறையில், தூக் கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தார்.

கடலூர் புதுநகர் போலீஸார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தனலட்சுமி எழுதி வைத்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.

இந்நிலையில் நேற்று காலை தனலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் சின்னபாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் செம்மண்டலத்திலுள்ள தனியார் கல்லூரி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த, ஏடிஎஸ்பி அசோக் குமார் மற்றம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தனலட்சுமியின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் தங்கள் மகள் சாவில் சந்தேகம் உள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்த கடலூர் துணைமேயர் தாமரைச்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

காலையில் கல்லூரியின் கழிவறையில், தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in