Published : 18 May 2022 06:15 AM
Last Updated : 18 May 2022 06:15 AM

மதுரை | வேலை வாங்கி தருவதாக ரூ.7.38 லட்சம் பறிப்பு: அரசு பள்ளி ஆசிரியை உட்பட 2 பேர் மீது வழக்கு

விருதுநகர்: மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலு வலகத்தில் எழுத்தர் வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 7.38 லட்சம் மோசடி செய்ததாக, மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை உட்பட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர் முருகன் (55). சிவகாசி சாலையில் வாகனங் களுக்கான பாடி கட்டும் பட்டறை நடத்தி வருகிறார்.

சிவகாசி அருகே உள்ள நதிக்குடியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஸ்டாலின் என்பவர், அவரது லாரியை வேலைக்கு விட வந்தபோது முருகனுடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, தனக்கு மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை மீனா என்பவரைத் தெரியும் என்றும், முருகனின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவார் எனக் கூறியுள்ளார். அதற்கு ரூ. 7 லட்சம் ஆகும் என்றும் ரூ.2 லட்சம் முன்பணம் தர வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதை நம்பிய முருகன் பணம் தருவதாகக் கூறினார்.

அதையடுத்து, ஆசிரியை மீனாவை ஸ்டாலின் விருதுநகரில் உள்ள முருகனின் பட்டறைக்கு கடந்த 19.9.2019 அன்று அழைத்து வந்தார். அப்போது அவரிடம் ரூ.2 லட்சம் முன்பணத்தை முரு கன் கொடுத்துள்ளார். பின்னர் பல்வேறு தவணைகளாக நேரி லும், வங்கிக் கணக்கிலும் ரூ.7 லட்சம் கொடுத்தார்.

அதையடுத்து, மதுரை கல் லூரிக் கல்வி இணை இயக் குநர் அலுவலகத்தில் எழுத்தர் வேலைக்கான உத்தரவு என்று, கடந்த 27.9.2019-ம் தேதியிட்ட உத்தரவை ஆசிரியை மீனா கொடுத்து, 14.12.2019 அன்று வேலையில் சேரலாம் எனக் கூறியு ள்ளார். மேலும், முதல்நாள் தன்னிடம் கேட்டுக்கொண்டு வேலையில் சேரச் சொல்லுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட தேதியில் வேலை யில் சேர்வதற்காக கேட்டபோது, உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபிறகு பணியில் சேரலாம் என ஆசிரியை மீனா கூறியுள்ளார். அதன்பிறகும் தாமதம் செய்து வந்த ஆசிரியை மீனா மேலும் ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார். அப்பணத்தையும் முருகன் கொடுத்தார்.

ஆனால், பணம் கொடுத்து பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமல் ஆசிரியை மீனா ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் முருகன் நேற்று புகார் அளித்தார்.

அதையடுத்து மீனா, ஸ்டாலின் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x