

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனை தொடர்பாக, புதுக்கோட்டை குன்னவயல் பகுதியைச் சேர்ந்த சி.மதி(33) என்பவரை திருக்கோகர்ணம் போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், இவருடன் கூட்டு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக இலுப்பூர் அந்தோனியார்கோவில் தெருவைச் சேர்ந்த ஜெ.பிரான்சிஸ் பிரித்திவிராஜ்(26), திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கே.உடையாபட்டியைச் சேர்ந்த ஏ.அன்புசெல்வன்(19), திண்டுக்கல் ஒய்எம்ஆர் பட்டியைச் சேர்ந்த ஜெ.ஜோஸ்வா(20) மற்றும் தூத்துக்குடி, சண்முகபுரத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமாரவேலின் மகன் கியோ போஸ்(23) ஆகிய 5 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.