

ஆம்பூர்: ஆம்பூர் அருகே நாட்டுத் துப்பாக்கி பதுக்கிய நபரை காவல் துறையினர் நேற்று கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் பைரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (27). இவர், அதே பகுதியில் கிஷோர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக உமராபாத் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உமராபாத் காவல் துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது, விவசாய நிலத்தில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.