

மதுரை: மதுரையில் குடும்பத் தகராறில் பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அய்யர்பங்களா பகு தியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வங்கி ஒன்றில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி சுகன்யா(38). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சுகன்யா ஆசிட்டை குடித்து தற் கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை மருத்துவ மனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.