ரூ.5.93 கோடி மின்சாரம் திருட்டு: தந்தை, மகன் கைது

ரூ.5.93 கோடி மின்சாரம் திருட்டு: தந்தை, மகன் கைது
Updated on
1 min read

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பாலேகான் என்ற இடத்தில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியின் மின்கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இதனால், சந்தேகமடைந்த மின்வாரிய அதிகாரிகள் குவாரியின் மின் மீட்டரை சோதனை செய்தனர். இதில் மீட்டரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்க கூடிய சர்க்கியூட் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதன் மூலம் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை குறைவாகக் காட்டி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை மோசடி நடந்திருப்பதும் இதன் மூலம் ரூ.5 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக கல்குவாரியின் உரிமையாளர் சந்திரகாந்த் அவரது மகன் சச்சின் மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in