திருவண்ணாமலை: தேவிகாபுரத்தில் 4 கடைகளில் தொடர் திருட்டு

தேவிகாபுரத்தில் திருட்டு நடந்த அரிசி கடை.
தேவிகாபுரத்தில் திருட்டு நடந்த அரிசி கடை.
Updated on
1 min read

சேத்துப்பட்டு அடுத்த தேவிகா புரத்தில் உள்ள வணிக வளா கத்தில் இயங்கி வரும் 4 கடைகளில் ரூ.75 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகா புரத்தில் உள்ள போளூர் சாலையில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள கடைகளில் வர்த்தகம் முடிந்து நேற்று முன்தினம் இரவு பூட்டப்பட்டது.

இந்நிலையில் அரிசி கடை, மளிகை கடை, எலெக்ட்ரிக் கடை உட்பட 4 கடைகளின் ஷட்டர் களின் பூட்டு உடைக்கப்பட்டு திறந் திருப்பது நேற்று தெரியவந்தது. இதையறிந்த உரிமையாளர்கள் கடைக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கடைகளில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் ரூ.75 ஆயிரம் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் 4 கடைகளில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர். சேத்துப் பட்டு மற்றும் தேவிகாபுரத்தில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in