சோளிங்கரில் தங்கச்சங்கிலி திருடிய 2 பெண்கள் கைது

சோளிங்கரில் தங்கச்சங்கிலி திருடிய 2 பெண்கள் கைது
Updated on
1 min read

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சோளிங்கர் சுப்பாராவ் தெருவைச் சேர்ந்த ராணி என்பவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த கவிதா (35), சங்கீதா (32) ஆகிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து சோளிங்கர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in