புதுச்சேரி | இட விவகாரத்தில் தகராறு: வீடு புகுந்து வெட்டிய கூலிப்படையினர் கைது

கைதான கூலிப்படையினருடன் முதலியார்பேட்டை  காவல்நிலையத்தினர்.
கைதான கூலிப்படையினருடன் முதலியார்பேட்டை காவல்நிலையத்தினர்.
Updated on
1 min read

புதுச்சேரி: இடவிவகாரத்தில் வீடு புகுந்து வெட்டியதாக கூலிப்படையினர் உட்பட 5 பேர் புதுச்சேரி போலீஸா ரால் கைது செய்யப்பட்டனர்.

முதலியார்பேட்டையில் உள்ள வாணரபேட்டை, தாமரை நகர், பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் கமலஹாசன் (40) என்பவருக்கும் முத்தியால்பேட்டை, அங்காளம் மன் நகரில் குடியிருக்கும் மஞ்சினி மற்றும் அவரது மனைவி சரளா ஆகியோர் இடையே நிலப் பிரச் சினை இருந்து வருகிறது.

இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி இரவு முதலியார்பேட்டை, வாணரபேட்டையில் உள்ள கமல ஹாசன் வீட்டிற்கு வந்த சரளா மற்றும் அவரது மகன்களான நாகராஜ், மதிவாணன் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப் பட்ட கூலிப்படையை சேர்ந்த விக்கி (எ) பட்ஸ் விக்கி, கார்த்தி (எ) எச்ச கார்த்தி மற்றும் சீனு ஆகியோர் கத்தியை எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றனர்.

அவருடன் பேச்சுவார்த்தையில் இருக்கும் பொழுது கமலஹாசனை தலை, கை, விலாப்பகுதியில் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

இது சம்பந்தமாக முதலியார் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது பெற்று, சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று பார்த்தபோது கமல்ஹாசன் வெட்டுக் காயங்களுடன் மயங்கி நிலையில் இருந்தார். அவரை உடனே காவலர்கள் புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இது சம்பந்தமாக கமலஹாச னின் மனைவி பிரேமா அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாகராஜ் (29), கார்த்தி (34), விக்கி (எ) விக்கி ராய் (30) , மதிவாணன் (28), சீனிவாசன் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் குற்றவாளிகளிடம் இருந்து4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் நேற்று நீதிமன்ற காவ லில் ஒப்படைத்தனர்.

நிலப் பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in