கரூரில் திருநங்கைகள், பேருந்து ஊழியர்கள் மோதல்: அரசுப் பேருந்துகள் கண்ணாடி உடைப்பு

கரூரில் திருநங்கைகள், பேருந்து ஊழியர்கள் மோதல்: அரசுப் பேருந்துகள் கண்ணாடி உடைப்பு
Updated on
1 min read

கரூர்: கரூர் மாவட்டத்தில் அரசு பேருந்து பயணிகளிடம் காசு வசூலித்த விவகாரம் தொடர்பாக அரசுப் பேருந்து ஊழியர்கள் திருநங்கைகளிடையே ஏற்பட்ட மோதலில் 2 அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைக்கப்பட்டுள்ளன.

கரூர் பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் காசு வசூலித்து வருகின்றனர். நேற்றிரவு அரசுப் பேருந்தில் ஏறிய திருநங்கைகள் காசு கேட்டுள்ளனர். அப்போது பயணிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணிகளுக்கு ஆதரவாக பேசியதால் வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த திருநங்கைகள் 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்ததுடன், அங்கிருந்து போக்குவரத்து அலுவலக கண்ணாடியையும் உடைத்தனர். இதையடுத்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் திருநங்கைகள் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதனிடையே, போலீஸார், மோதல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், பயணிகள் ஆகியோரும் மோதல் தொடர்பாக படம்பிடித்துள்ளனர். அவர்கள் மீதும் திருநங்கைள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் பேருந்து நிலையத்திற்குள் சில மணி நேரம் பேருந்துகள் வரவில்லை. இதையடுத்து பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வெளியே வந்து பேருந்துகளில் ஏறிச் சென்றனர். இது குறித்து கரூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மோதல் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in