Published : 12 May 2022 06:06 AM
Last Updated : 12 May 2022 06:06 AM

அதிக வட்டிக்கான பணபரிமாற்றத்தில் முன்விரோதம்: மரக்காணம் இளைஞர் கொலை வழக்கில் 9 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூட கிடங்கில், மரக்காணம் இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிடங்குக்குஇடதுபுறமுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த டிநகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர்.

விசாரணையில், கொலையுண் டவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த ஷேக் சுல்தான் (28) என்ப தும், கடன் தகராறில் அவர் கடத்தி வரப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக புதுச்சேரி நெல்லித்தோப்பு அருள் படையாட்சி வீதியைச் சேர்ந்த சிவசங்கர்(எ)சிவா (38), அரியாங்குப்பம் கோட்டைமேடு பிரபாகரன் (எ) பிரபா (28), முதலியார்பேட்டை ஆண்டி யான்தோப்பு சந்திரமோகன் (34), குருமாம்பேட் ஹவுசிங் போர்டு பன்னீர்செல்வம் (எ) ராஜேஷ் (35), நெல்லித்தோப்பு மார்க்கெட் வீதி ஜாகீர் உசேன் (38), நெல்லித்தோப்பு பெரியார் நகர் காஸ்டன் (எ) குட்டி காஸ்டன் (32), வானூர் வட்டம் பெரிய கோட்டக்குப்பம் சரத்(எ)சரத்ராஜ்(26), நெல்லித்தோப்பு கான்வென் வீதி ஆல்பர்ட் சகாய ராஜ் (37), சாரம் சக்தி நகரைச் சேர்ந்த சுரேஷ் (36) ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பிடித்து விசாரணை நடத்தினர்.

அதிக வட்டிக்கு ரூ. 40 லட்சம் கடன்

விசாரணை தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படும் விவரம் வருமாறு:

கொலை செய்யப்பட்ட ஷேக் சுல்தான், முன்பு புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். அப்போதுஉடற்பயிற்சி கூடத்துக்கு சென்றபோது சிவசங்கர் உள்ளிட்டோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்வதாகவும், அதற்காக அதிக வட்டி கொடுப்பதாகவும் கூறி சிவசங்கர் உள்ளிட்டோரிடம் ரூ. 40 லட்சம் வரை ஷேக் சுல்தான் கடன் பெற்றுள்ளார்.

தொடக்கத்தில் வட்டி கொடுத்த அவர், பின் வட்டியை கொடுக்காமல் இருந்துள்ளார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பணத்தை செட்டில் செய்வதற்காக அவரிடம் எழுதியும் வாங்கியுள்ளனர். அதன்பிறகும் ஷேக் சுல்தான் பணத்தை தரவில்லை. இதனால் சிவசங்கர் உள்ளிட்ட நபர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

கடந்த 9-ம் தேதி அவர் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் ஜூஸ் கடை நடத்தி வரும் நண்பர் கவியரசனுடன் பைக்கில் புதுச்சேரி வந்துள்ளார்.

தகவல் அறிந்த சிவசங்கர் உள்ளிட்டோர் ரெயின்போ நகர் 45 அடி சாலையில் ஷேக் சுல்தான் வந்தபோது, அவரை கடத்தியுள்ளனர். உடன் வந்த கவியரசனை விரட்டி விட்டுள்ளனர். பின்னர் புதுச்சேரி நெல்லித்தோப்பு கான்வென்ட் வீதியில் உள்ள ஆல்பர்ட் சகாயராஜின் வீட்டுக்கு கடத்தி சென்றனர்.

அங்கு அடைத்து வைத்து பணத்தை கேட்டு பைப், உருட் டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஷேக் சுலாதான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அதிகாலையில் உடலை ஆட்டோவில் எடுத்துவந்து தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட குடோன் அருகே வீசி விட்டு சென்றுள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித் தனர்.

இச்சம்பவத்தில், 9 பேரையும் கைது செய்த போலீஸார் அவர் களிடம் இருந்து 3 பைக், ஒரு ஆட்டோ மற்றும் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு பைக், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன்பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறை யில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x