

விழுப்புரம்: திண்டிவனம் அருகே 3 மாணவர் களால் நெருப்பில் தள்ளப்பட்ட பழங்குடியின மாணவன் காய மடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனம் அருகே காட்டுசி விரி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (39). இருளர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த இவரது மகன் சுந்தரராஜன் (11), அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள கருமகாரிய கொட்டகை அருகே நேற்று முன்தினம் குப் பைகள் தீப்பிடித்து எரிந்து கொண் டிருந்தது.
அப்போது அந்த வழியாக நடந்து சென்ற சுந்தரராஜனை, 3 மாணவர்கள் திடீரென தீயில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில், சுந்தரராஜனின் உடலில் தீப்பற்ற, உடனே அச்சிறுவன் அருகில் தேங்கி கிடந்த தண்ணீரில் படுத்து, உருண்டுதன்மேல் பற்றியத் தீயை அணைத் துள்ளார்.
பின்னர் சுந்தரராஜன் வீட்டுக் குச் சென்று தன் தாயார் அஞ்சலை யிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து திண்டிவனம் அரசுமருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸார் வன்கொடுமை சட்டம் உட்பட 2 பிரிவின் கீழ் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீது வழக் குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
இதற்கிடையே திண்டிவனம் சார்-ஆட்சியர் அமித் மருத்துவ மனைக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற் கொண்டார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரிடம் கேட்டபோது, தற்போது இரு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த பின்பே நடந்தது என்ன என்பது குறித்து முழுமையாக தெரிய வரும் என்று தெரிவித் தனர்.