டெல்லியில் ரூ.434 கோடி மதிப்புள்ள 62 கிலோ ஹெராயின் பறிமுதல்

டெல்லியில் ரூ.434 கோடி மதிப்புள்ள 62 கிலோ ஹெராயின் பறிமுதல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் சரக்கு விமானத்தில் வந்த பொருகள்களை சோதனையிட்ட போது 62 கிலோ ஹெராயின் போதைப் பொருளை வருவாய் புலனாய் இயக்ககம் (Directorate of Revenue Intelligence) கைப்பற்றியது.

டெல்லி விமான நிலையத்தில் செவ்வாய்கிழமை "கருப்பு வெள்ளை" (BLACK & WHITE) ஆபரேஷன் என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனையில், சரக்கு விமானத்தில் வந்த ட்ராலி பேக்குகள் இருப்பதாகச் சொல்லப்பட்ட சரக்குகளை இறக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதிலிருந்து 55 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதேபோல் உகாண்டாவின் என்டேபே-யிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒரு சரக்கு விமானத்திலிருந்து மேலும் 7 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் கைப்பற்றப்பட்ட 62 ஹெராயின் போதைப்பொருளின் சட்டவிரோத சந்தை மதிப்பு ரூ. 434 கோடி.

சரக்கு விமானத்தில் இருந்கு 330 ட்ராலி பேக்குகள் இறக்கப்பட்டன அதில், 126 ட்ராலி பேக்குகளின் உலோக கைப் பிடிகளுக்குள் வைத்து 62 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ட்ராலியை வரவழைத்த நபரை வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகப்படும் மற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in