Published : 10 May 2022 06:40 AM
Last Updated : 10 May 2022 06:40 AM

திருக்கோவிலூர் அருகே சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்: பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே பள்ளிச் சிறுமிகளை பாலியல் ரீதியாக அணுகியதாக தொடக் கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி அமைந் துள்ளது. இப்பள்ளியில் திருவிக்ரமன்(52) என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை தலைமை யாசிரியர் அடிக்கடி தொட்டுப் பேசுவதாக புகார் எழுந்தது. இதனையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, தலைமை யாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த முகையூர் உதவி தொடக்க கல்வி அதிகாரி தலைமையிலான குழுவினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை குழுவிடம், தலைமையாசிரியர் திருவிக்ரமன், பள்ளியில் உள்ள தென்னை மரத்தில் அவ்வூரைச் சேர்ந்த சிலர் தேங்காய்களை பறித்ததால் அவர்களைக் கண்டித்தேன். இதனால் சிலர் தவறான தகவலை அளித்ததாக விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை குழுவினர் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலை யில் தலைமையாசிரியர் திருவிக்ரமனை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தர விட்டுள்ளார்.

மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x