

சென்னை: தமிழகத்தில் குடும்பத் தகராறுகளால்தான் அதிக கொலைகள் நடப்பதாக காவல் துறை கொள்கைக் விளக்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காவல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டின்படி குடும்ப தகராறுகளால் நடந்த கொலைகள் குறித்த விவரம்:
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 1,597 கொலைகள் நடந்துள்ளது. இதில் குடும்பத் தகராறு காரணமாக 379 கொலைகள், வாய்த் தகராறு காரணமாக 337 கொலைகள், முன்விரோதம் காரணமாக 220 கொலைகள், காதல் மற்றும் பாலியல் காரணங்களுக்காக 221 கொலைகள், பணம் கொடுக்கல் - வாங்கல் காரணமாக 59 கொலைகள், நிலத் தகராறு காரணமாக 115 கொலைகள், குடிபோதை தகராறு காரணமாக 109 கொலைகள், வரதட்சணை காரணமாக 4 கொலைகள், அரசியல் காரணங்களுக்காக ஒரு கொலை, சாதிப் பகுபாடு காரணமாக 9 கொலை, இதர காரணங்களுக்காக 143 கொலைகள் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.