

கோவையைச் சேர்ந்த தம்பதிக்கு 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது மகன் உள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் முதியவர் ஒருவர், மிட்டாய் வாங்கித் தருவதாகக்கூறி சிறுவனை அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக தன் பெற்றோ ரிடம் சிறுவன் தெரிவித்துள்ளார். செட்டிபாளையம் காவல்நிலை யத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில், செட்டிபாளை யத்தைச் சேர்ந்த குப்புசாமி (63) என்பவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், ஏற்கெனவே 8 வயதுடைய மற்றொரு சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து குப்புசாமியை போலீஸார் கைது செய்தனர்.