Published : 07 May 2022 07:00 AM
Last Updated : 07 May 2022 07:00 AM

சிவகங்கை | இணைய லிங்கில் தனது விவரங்களை பதிவு செய்து ரூ.75,000-ஐ பறிகொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர்

சிவகங்கையில் தனது மொபைல் எண்ணுக்கு வந்த இணைய லிங்கில் பான்கார்டு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து ரூ. 75 ஆயிரத்தை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பறி கொடுத்துள்ளார்.

சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அழகுமுத்து (67). இவரது மொபைல் எண்ணுக்கு பான்கார்டை பதிவு செய்யாவிட்டால் வங்கி செயலி மற்றும் சேமிப்புக் கணக்கு முடக்கப்படும் என எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. மேலும் அதில் ஒரு இணைய லிங்கும் வந்தது. இதையடுத்து அழகுமுத்து அந்த இணை லிங்கில் பான்கார்டு உள்ளிட்ட தனது விவரங்களை பதிவு செய்தார். அடுத்த சில நொடிகளிலேயே அவரது வங்கிக் கணக்கில் இருந்து முதல் தவணையாக ரூ.49,000, அடுத்த தவணையாக ரூ.25,997 என மொத்தம் ரூ.74,997 எடுக்கப்பட்டது.

தான் ஏமாந்ததை அறிந்த அழகுமுத்து, இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x