ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்: தென்மண்டல ஐஜி நடவடிக்கை

கஜேந்திரன்
கஜேந்திரன்
Updated on
1 min read

ராமநாதபுரம்: தென்மண்டல ஐஜி உத்தர வின்பேரில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் கஜேந்திரன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளராகப் பணியாற்றியபோது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். அவர் மீது பல்வேறு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏர்வாடி காவல் நிலையத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக் களுக்கு முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு தொட ர்ந்து உள்ளது.

ஏர்வா டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்கிடம் ஆய்வாளர் கஜேந்திரன் மீது புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் கஜேந்திரனை ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு மாற்றி ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in