சிவகாசியில் பட்டாசு தொழிலாளி கொலை: திருநங்கைகள் இருவரிடம் விசாரணை

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி கொலை: திருநங்கைகள் இருவரிடம் விசாரணை
Updated on
1 min read

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பட்டாசு தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் நேற்று கொலை செய்யப்பட்டார்.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள பிள்ளைகுழி பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக சிவகாசி நகர் போலீஸாருக்கு நேற்று பிற்பகல் தகவல் கிடைத்தது. போலீஸார் சடலத்தை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அந்நபர் திருத்தங்கல் தேவராஜ் காலனி பகுதியைச் சேர்ந்த டேவிட் (38) என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி கல்பனா, மகள் சுபா (10) உள்ளனர். சம்பவ இடத்தில் எஸ்.பி. மனோகர் விசாரணை நடத்தினார். கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, திருநங்கைகள் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in