

விருதுநகர்: விருதுநகர் அருகே பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் அருகே சூலக்கரை நடுத்தெருவைச் சேர்ந்த வியாபாரி முருகேசன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மூத்த மகன் நிதிஷ்குமார் (21), திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இளைய மகன் தினேஷ் (17), ஆர்.ஆர். நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
முருகேசனும் ஈஸ்வரியும் பேரையூரில் உள்ள ஒரு கோயில் கும்பாபிஷேகத்துக்கு நேற்று காலை சென்றனர். முருகேசனின் தந்தை வேலுச்சாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென அறைக்குள் சென்று தினேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சூலக்கரை போலீஸார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். அப்போது அந்த அறையில் தினேஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், ‘நான் மிகச் சிறப்பானவனாக வர வேண்டும் என்று பெற்றோர் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால், என்னால் முடியவில்லை. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள்’ என எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.