

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவியிடம் மாடசாமி என்பவரது மகன் விக்னேஷ்(24) என்பவர் தகாத முறையில் நடந்துகொண்டது குறித்து, அம்மாணவியின் பெற்றோர் திருநெல்வேலி ஊரக மகளிர்காவல் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை மேற்கொண்டு விக்னேஷை போக்ஸோ வழக்கில் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து விக்னேஷுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம்விதித்து நீதிபதி அன்புசெல்வி தீர்ப்பு கூறினார்.