Published : 04 May 2022 06:10 AM
Last Updated : 04 May 2022 06:10 AM

வங்கி ஊழியர்போல பேசி ரிசர்வ் போலீஸிடம் ரூ.1 லட்சம் மோசடி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூரைச் சேர்ந்த ராமசாமி மகன் திவாகர்(28). இவர்ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரிசர்வ் போலீஸாகப் பணிபுரிகிறார்.

இவர் பரமக்குடியில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இவ்வங்கியில் 2 மாதங்களுக்கு முன்பு, கடன் அட்டை பெற்றுவிட்டு, அதைப்பயன்படுத்தாமல் வைத்திருந்தார்.

இந்நிலையில், 11.4.2022 அன்றுதிவாகரின் மொபைலுக்கு தொடர்புகொண்ட பெண் ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்துபேசுவதாகக்கூறி இந்தியில் பேசியுள்ளார்.

பின்னர் கார்டின் பின்புறம் உள்ள 3 இலக்க எண், மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணைக் கேட்டுள்ளார். சில மணி நேரம் கழித்து திவாகரின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 3 முறை ரூ.99,812 எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து திவாகர் அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x